இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் நிர்மாணப்பணிகள் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:18

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் நிர்மாணப்பணிகள் நாளை ஆரம்பம்

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் நிர்மாணப்பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறும். 3 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி அமைக்கப்படும். பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப ஆசிரியர்களை பெற்றுக்கொடுப்பதற்காக தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரிகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடநெறியை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. தேசிய தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரியை அமைப்பதன் மூலம் அதில் பயிற்சிபெற்று வெளியேறும் ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:18

Default