fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாத்துறைக்கான நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:06

சுற்றுலாத்துறைக்கான நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுற்றுலா ஹொட்டல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு வழங்கப்படும் நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்காக நியமிக்கப்பட்ட விசேட உபகுழு பல்வேறு தீர்மானங்களை எட்டியுள்ளது. அதன் அனுகூலங்கள் உரியவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா சபையின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா துறைசார் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிவாரண கடன் உட்பட உப குழு தீர்மானங்களை உரிய முறையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க