fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை வசதிகள் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் : சுகாதார அமைச்சர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:10

நுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை வசதிகள் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் : சுகாதார அமைச்சர்

நுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை வசதிகள் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நுரையீரல் மாற்று அவசர சிகிச்சைப்பிரிவு கண்டி பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்காக 400 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நாட்டிலுள்ள வைத்தியசாலைக்கு தேவையான பௌதீக வளங்கள் வழங்கப்படுகின்றன. மருந்து பொருட்களும் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுகின்றன. வைத்தியசாலைகளை தரமுயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் வைபவம் நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் 9 மாடிகளை கொண்ட பேராசிரியர் பிரிவு, 15 மாடிகளை கொண்ட அவசர விபத்து சிகிச்சைப்பிரிவு மற்றும் வாட் தொகுதியும் நிர்மாணிக்கப்படும். இதேவேளை நாளையதினம் 5 மாடிகளை கொண்ட வெளி நோயாளர் பிரிவு மற்றும் 9 மாடிகளை கொண்ட வைத்தியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க