fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முடிவை மாற்றினார் அம்பாதி ராயுடு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:20

முடிவை மாற்றினார் அம்பாதி ராயுடு

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற அவர் மீண்டும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தீர்மானித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அம்பாதி ராயுடு ஹைதராபாத் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆவலுடன் இருப்பதாகவும் அம்பாதி ராயுடு குறிப்பிட்டுள்ளார். தான் ஏற்கனவே ஓய்வுபெறுவதாக எடுத்த முடிவு உணர்ச்சிவசத்தால் எடுக்கப்பட்டதாக அம்பாதி ராயுடு குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணிக்கு தெரிவுசெய்யப்படாததன் காரணமாக அம்பாதி ராயுடு ஏமாற்றமடைந்தார். இதனால் கிரிக்கெட் தெரிவுக்குழுவை கடுமையாக விமர்சித்திருந்த அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:20

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க