fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பிரதமர் எதிர்வரும் 2ம் திகதி மாலைதீவு பயணம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 18:07

மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பிரதமர் எதிர்வரும் 2ம் திகதி மாலைதீவு பயணம்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2ம் திகதி மாலைதீவு பயணமாகவுள்ளார். அங்கு நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் அவர் கைச்சாத்திடவுள்ளார்.

பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயததின் போது இருத்தரப்பு உறவுகளை மேலும் வலுவடையச்செய்வதற்கும் இருநாடுகளுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்கள் தொடர்பாகவும் கருத்து பரிமாறப்படவுள்ளன. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உயர் கல்வி, நீர்விநியோக துறையின் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிற்பயிற்சி இளைஞர் விவகார அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான விசா வசதிகள் குறித்த ஒப்பந்தம், சிறுவர், பெண்கள் முதியோர் விசேட தேவையுடையோரின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பவுள்ளன.

ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் அந்நியோன்ய உறவுகளை மேலும் விரிவுப்படுத்த இதன் ஊடாக வாய்ப்பு கிட்டும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 18:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க