fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மக்களின் ஆணையின் மூலம் தெரிவாகிய அரசாங்கமானது பொது மக்களின் நலன் கருதியே செயல்பட வேண்டும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 18:00

மக்களின் ஆணையின் மூலம் தெரிவாகிய அரசாங்கமானது பொது மக்களின் நலன் கருதியே செயல்பட வேண்டும்

மக்களின் ஆணையின் மூலம் தெரிவாகிய அரசாங்கமானது பொது மக்களின் நலன் கருதியே செயல்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். கம்பஹா தொழில்நுட்ப கலலூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கம்பஹா தொழில்நுட்ப கல்லூரியில் கொரிய அரசின்நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதியும் நவீன வசதிகளுடனான உபகரண தொகுதியையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அமைச்சர் றிஷாட் பதியூதின் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ராஜாங்க அமைச்சர்களான அஜித் மானப்பெரும, புத்திக பத்திரன, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரவிதான, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 18:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க