சந்தேகநபரான மருத்துவருடன் மேலும் ஆறு பயங்கரவாத சந்தேகநபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:46

சந்தேகநபரான மருத்துவருடன் மேலும் ஆறு பயங்கரவாத சந்தேகநபர்கள் கைது

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்யும் சூழ்ச்சி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் மருத்துவர் வழங்கிய தகவல்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாக்குமூலமளிக்கவில்லையென பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மருத்துவரை விசாரித்த போது நேற்றைய தினம் மேலும் இரண்டு பயங்கரவாத சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பளை வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் என்பவர் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக கடந்த 18ம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் அன்றைய தினமே யாழ். பயங்கரவாத ஒழிப்பு விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே நான்கு பயங்கரவாத சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் சந்தேகநபரான மருத்துவருடன் மேலும் ஆறு பயங்கரவாத சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிபப்டையில் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் மற்றும் கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:46

Default