fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான பாதுகாப்பு மாநாடு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 16:59

உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான பாதுகாப்பு மாநாடு

இலங்கை இராணுவம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019 பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகியது.

பாதுகாப்பு துறைசார்ந்த புத்திஜீவிகள் நிபுணர்கள் மற்றும் பல்துறை சார்ந்த தரப்பினர் உள்ளிட்ட 800கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். சமகால பாதுகாப்பு சுற்றுவட்டத்தில் இராணுவத்தின் திறமைகள் எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறுகின்றது. மாநாடு நாளை நிறைவடையும். தற்போதைய பாதுகாப்பு பின்னணி மோதல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு பயங்கரவாதம் மற்றும் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து மாநாடடில் ஆராயப்படவுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் முழு அளவிலான கண்காணிப்பின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இராணுவ வரலாறு தொடர்பான நிபுணர் நித்தின் ஏ கோக்குலே மாநாட்டில் அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார். முப்படை தளபதிகள் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 16:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க