வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 16:52

வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

வாகன நெரிசலின் காரணமாக நாளாந்தம் ஒரு பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்யரட்ன தெரிவித்துள்ளார். வாகன நெரிசல் காரணமாக வீண் விரயமாகும் எரிபொருள் மற்றும் செயல்படக்கூடிய மனித பலம் வீண்விரயமாவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு நிதி நகரத்தை கேந்திரமாகக் கொண்டு பெரும்பாலான நிறுவனங்களை அமைத்தல் மற்றும் தனியார் வாகன பாவனை அதிகரிக்கின்றமை, வீதிகளில் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணமாகும். பொதுமக்களுக்கு பொருத்தமான பொதுப் போக்குவரத்து சேவையொன்று இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

கொழும்பு நகரத்தை அண்டியுள்ள வீதிகளில் நிலவும் வாகன நெரிசலை குறைப்பதற்காக மென் ரயில் சேவை மற்றும் உள்ளக நீர் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் தரமான போக்குவரத்து கட்டமைப்பொன்று கிட்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 16:52

Default