ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் : தேர்தல்கள் ஆணைக்குழு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:18

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் : தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் 14 ஆயிரம் வாக்கெடுப்பு நிலையங்கள் உள்ள நிலையில் அவை அனைத்தையும் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க முடியுமென ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றமையே இதற்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:18