கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:17

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. 9வது முறையாக நடைபெறும் இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளில் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் அண்மையகால சம்பவங்கள் மற்றும் போக்கினை கருத்திற்கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் நாளையும் மாநாடு இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:17

Default