உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 13:57

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறும். முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும். முற்றாக மூடப்படும் பாடசாலைகள் அடுத்த தவணைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 13:57

Default