பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
விமான நிலைய கட்டுமானப்பணிகள் 30 வீதம் வரை நிறைவடைந்துள்ளதாகவும் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இன்னும் பெறப்படவில்லையெனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். இந்நிலையில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் பெறப்பட்டதன் பின்னர் பலாலி விமானத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.