தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை
Related Articles
லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று எமி ஜாக்சன் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.
https://twitter.com/i/status/1165858612998299648