fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 11:33

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு அதிகரிக்ககூடும், என்றும் இந்த காலநிலை நாளை முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். அநுராதபுரம் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அடிக்கடி 50 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்ககூடும். இடி மின்னலுடனான மழையின் போது இந்த பிரதேசத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க