fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2019 18:38

அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம்

அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பாம்புகள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுதாகவும், பல வகையான பாம்புகள் அழியும் நிலையில் இருப்பதாகவும் வன உயிரின ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளை சுற்றி காணப்படுகிறது. குறித்த காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. அண்மையில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது.

இந்நிலையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை உயிரினங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் இராணுவப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2019 18:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க