தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சபை அமர்வு இலங்கையில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:09

தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சபை அமர்வு இலங்கையில்..

தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 3 வது அமர்வு இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 2 ம் 3 ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சபை அமர்வு நடாத்தப்படும். அதில் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தெற்காசிய பாராளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

வலய நாடுகளின் சிறுவர்களின் முன்னேற்றம் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் அமர்வில் கலந்துரையாடப்படும். சிறுவர்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதை தடுப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.

சிறுவர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான இணைப்பை இலகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வலையமைக்கப்பட்ட சிறுவர் பாராளுமன்றத்தை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் குழந்தைப் பராயத்தை பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் தென்னாசிய நாடுகள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் தெற்காசிய பாராளுமன்ற அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:09

Default