யாழ் கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 11:59

யாழ் கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

யாழ்ப்பாணம், அலியாவலை கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின் போது குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.

பொதியிலிருந்து 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 11:59

Default