fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 15:02

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த தண்டனையை வழங்கியுள்ளது. கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றங்களை கஞ்சிபான இம்ரான் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்தே அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

ஐந்தரை கிலோ கஞ்சாவை வைத்திருந்தமைக்காக கஞ்சிபான இம்ரான் கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ம் திகதி கைதுசெய்யப்பட்டார். குறித்த வழக்கில் பிணையிலிருந்த போதே அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அண்மையில் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் வைத்து கஞ்சிபான இம்ரான் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 15:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க