fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 15:00

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றதென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரு தலைவர்களும் ஒன்றரை மணித்தியாலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேசித்தீர்க்க வேண்டும். மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது. காஷ்மீர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் பிரான்ஸ் ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க தயாரென அமெரிக்க ஜனாதிபதி இரு தடவைகள் அறிவிருத்திருந்தார். இவ்வாறான நிலையில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றதென பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 15:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க