பத்தரமுல்லை பொழுதுபோக்கு பூங்கா நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க பொழுதுபோக்கு பூங்காவை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
நிகழ்வு இன்று காலை 9.45க்கு ஆரம்பமாகும். கொழும்பு நகரை அற்புத நகராக மாற்றியமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.