fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 13:17

பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்

யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயற்படும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டுமென பாகிஸ்தான் ஐ.நா வுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெண் பிள்ளைகளின் கல்வி, ஊட்டச்சத்தளித்தல், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கு எதிராக விழிபுணர்வை ஏற்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் யுனிசெப் அமைப்பு சேவைபுரிந்து வருகிறது. நியூயோர்க் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் குறித்த யுனிசெப் நிதியத்தின் நல்லெண்ண தூதராக கடந்த 2016ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்துச்செய்யப்பட்டமைக்கு எதிராக பிரியங்கா சோப்ரா ஆதரவாக செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் புல்வாமா தாக்குதலின் போதும் அவர் இந்திய இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகள் எழும் போது பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். இதனால் அவரை யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மஷாரி ஐ.நா வுக்கு கடிதமெழுதியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 13:17

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க