fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமேஸன் காடுகள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அழிவை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:47

அமேஸன் காடுகள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அழிவை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

பிரேசிலிலுள்ள அமேஸன் காடுகள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அழிவை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நிலைமை மனிதகுலத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள அமேஸன் மழைக் காடுகள் இவ் வருடம் பல முறை பற்றி எரிந்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் அமேஸன் காடுகளில் 72 ஆயிரம் முறைகள் காட்டுத் தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரேசில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க