கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெடிப்பொருட்களை கண்டறியும் திறன்கொண்டதும், பயணப்பொதிகளை பரிசோதிப்பதற்குமான எக்ஸ்ரே இயந்திரங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டிருந்தது.
இவ்வாறான 9 கட்டமைப்புக்களை அமைப்பதற்கும் அதனை பொருத்துவதற்காக விநியோகஸ்தர்களிடமிருந்து கேள்வி மனுக்களை கோருவதற்கும் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியது.