fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேஸ்புக் கணக்குகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு தேசிய கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:37

பேஸ்புக் கணக்குகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு தேசிய கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுறுவுவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததென தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எமது நண்பர்களிடமிருந்து வருகின்ற ஒருவகையான லிங்க்கை நாம் க்ளிக் செய்யும்போது அது பேஸ்புக் போன்ற இன்னுமொரு பக்கத்துக்கு செல்கிறது. அது சில சந்தர்ப்பங்களில் பேஸ்புக் வலைத்தளமாக இருக்கலாம். பெரும்பாலும் அவை இவ்வாறு ஊடுறுவுகின்ற நபர்களின் வலைத்தளமாக இருக்கும். எனவே அந்த லிங்க்கை நீங்கள் க்ளிக் செய்தவுடன் உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்ட் என்பவற்றை கோரினால், அது குறித்து நீங்கள் அவதானமாக இருக்கவேண்டுமென பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல அறிவுறுத்தியுள்ளார்.

அவதானமின்றி அவ்வாறான வலைத்தளங்களை நீங்கள் லொக் இன் செய்யும்போது அங்கிருந்து மீண்டும் உங்களது பேஸ்புக் கணக்குகளை வழமைக்கு கொண்டுவர முடியாதென கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo