fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:10

வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தடைக்காலம் 7 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியில் வந்து தான் குற்றமற்றவரென ஸ்ரீசாந்த் நிரூபித்தார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத இந்திய கிரிக்கெட் சபை அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதற்கெதிராக ஸ்ரீசாந்த் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றம் ஸ்ரீசாந்துக்கான வாழ்நாள் தடையை 7 வருடங்களாக குறைத்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் அவருக்கு விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் அவர் மீதான தடை முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அவர் போட்டிகளில் விளையாட முடியும். எனினும் தற்போது ஸ்ரீசாந்துக்கு 36 வயதாகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க