யாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 09:56

யாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப்பயணமாக வந்திருந்த அமெரிக்க பிரஜையை பின்தொடர்ந்து இரு இளைஞர்கள் அவரிடமிருந்து பணத்தினை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 09:56

Default