GPS தொழில்நுட்ப கருவியை பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப்பத்திரத்தை மேலும் நீட்டிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத்தகைய 16 பஸ் வண்டிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லமாராச்சி தெரிவித்துள்ளார். பஸ்கள் பயணிக்கும் இடம், தூரம் மற்றும் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்காக GPS தொழில்நுட்ப கருவி பயன்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.