fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:29

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் அவர் இக்கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து இல்லாது செய்யப்பட்ட நிலையில் இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் இத்தீர்மானத்திற்கு பாகிஸ்தானும், சீனாவும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையிலேயே ட்ரம்ப் காஷ்மீரில் நிலவரம் கடுமையாக உள்ளதாக பதிவிட்டுள்ளார். இரு பிரதமர்களுடனான தமது கலந்துரையாடல் சுமுகமாக இடம்பெற்றதாகவும் ட்ரம்ப் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மோதி காஷ்மீரில் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலின் போது வலியுறுத்தியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க