fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:30

அகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்

இலங்கை வீரர் அகில தனஞ்சய மற்றும் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்துவீச்சு பாணியில் சந்தேகம் எழுந்துள்ளது. காலியில் இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரும் 14 நாட்களுக்குள் தமது பந்துவீச்சு முறை குறித்து சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 18ம் திகதியிலிருந்து குறித்த 14 நாட்கள் அமுலிலுள்ளன. சோதனை அறிக்கை வெளியாகும் வரை அவர்கள் சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அகில தனஞ்சய முதல் இனிங்சில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அதேபோல் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கை அணியின் இரண்டாவது இனிங்சின் போது 3 ஓவர்கள் பந்துவீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:30

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க