fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாய் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:24

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாய் கைது

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் கைதானதாக தெரியவருகிறது. இப்பெண் ஹட்டன் டிக்கோயா வனராஜா பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு மூன்று வயதுடைய பெண் பிள்ளையொன்றும் 8 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசன்குளம் பகுதியில் பிறந்த குழந்தையொன்றின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள குளக்கரை பகுதியில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர் சிசுவினை குளத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க