fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹொங்கொங் போராட்டம் அமெரிக்க-சீனா வர்த்தகத்தை பாதிக்கும் : டிரம்ப் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 13:08

ஹொங்கொங் போராட்டம் அமெரிக்க-சீனா வர்த்தகத்தை பாதிக்கும் : டிரம்ப் தெரிவிப்பு

ஹொங்கொங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தை முழுமையாக இரத்து செய்ய கோரி பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை பயன்படுத்தினால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறப்பிடுகையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹொங்கொங்; விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க