fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச புகைப்பட விழா

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 12:01

அரச புகைப்பட விழா

அரச புகைப்பட விழா திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதிர திலங்க தெரிவித்துள்ளார். சர்வதேச புகைப்பட தினத்திற்கு அமைவாக இந்த விழா இன்று இடம்பெறவுள்ளது.

திரைப்படத்துறைக்கு உன்னதமான பணிகளை நிறைவேற்றியோரைப் பாராட்டி கலைஞர்கள் இருவருக்கு வி.யு.ரி.பெரேரா மற்றும் காமினி ஜயசிங்க ஆகியோருக்கு இதன் போது ‘அபிமானி’ விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கமைவாக, நவீன புகைப்படங்கள் தொடர்பில் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரின் உரையும் இங்கு இடம்பெறவுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாச்சாரத் திணைக்களம், கலைச்சபையின் புகைப்பட ஆலோசகர் சபை என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இதேவேளை, சிங்ஹாபிமானய புகைப்படக் கண்காட்சி இன்று ஆரம்பமாகி, 21ம் திகதி வரை இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 12:01

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க