fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொத்தலாவல வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 11:07

கொத்தலாவல வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை

பொரலஸ்கமுவ வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையின் 6வது மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் உளநல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரே இவ்வாறு மாடியிலிருந்து கீழே குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

28 வயதான குறித்த பெண் பன்னிப்பிட்டிய , மாலபல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்றது. இந்நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையின் போது வைத்தியசாலையின் பலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 11:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க