fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 15:05

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த வி.எச்.வி.சி.ஐ. எனப்படும் விசேட விமானத்தினூடாக அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அவர்களை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் பாதுகாப்புக்கென அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் விமானத்தில் வருகைதந்துள்ளது.

விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினூடாக நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க