fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச வைத்தியர்களுக்கு அரைசொகுசு வீடுகளை அமைக்க திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 15:03

அரச வைத்தியர்களுக்கு அரைசொகுசு வீடுகளை அமைக்க திட்டம்

சகல அரச வைத்தியர்களுக்கும் உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒன்பது மாதகால பகுதிக்குள் திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சீன மற்றும் துருக்கி முதலீட்டாளர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இலங்கை பிரதிநிதிகள் துருக்கிக்கு சென்று அந்நாட்டு முதலீட்டாளரால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைவாகவே கொள்முதல் முறையின் கீழ் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வைத்தியர்களின் நிலைகளுக்கமைய வீடுகள் நிர்மாணிக்கப்படுகிறது. தனி வீடு, அடுக்குமாடி வீடு என வீடுகள் அமைக்கப்படுகின்றன. குறித்த வீடுகளை அரை சொகுசு வீடுகளாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்காக மேலும் பல வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo