fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:22

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பாகிஸ்தான் வீரர்களும் ஐந்து இந்திய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இதனை இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மிர் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட தீர்மானத்தை கண்டித்து பாகிஸ்தான் பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

லாகூர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய சுதந்திர தினமானது இருள்சூழ்ந்த தினமென தெரிவித்துள்ளனர். காஷ்மிர் தொடர்பாக இந்தியா எடுத்த தீர்மானம் குறித்து ஐநாவின் பாதுகாப்பு குழு இன்று கூடவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மோதல்கள் ஏற்படகூடிய வகையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் ஐநாவின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டேரஸ் இருநாடுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க