fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிகார பகிர்வுக்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க ஐதேக அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:20

அதிகார பகிர்வுக்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க ஐதேக அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

அரசியல் அமைப்புச் சபை பிரேரித்துள்ள அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கான தேசிய கொள்கையை வகுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி எச்சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சகல வசதிகளுடனும் யாழ். நகரை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பின்னணிகளை வகுப்பதே பிரதமரின் யாழ். விஜயத்தின் நோக்கமாகும். எதிர்வரும் 5 வருடங்களுக்குள் யாழ். நகரில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த இன மக்களுக்கும் பெருமையுடன் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க போவதாக தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சரவணபவன் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ். மத்திய கலாசார மையத்தின் நிர்மாண பணிகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டார். 2.1 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய கலாசார மையத்தில் நவீன வசதிகளை கொண்ட இரண்டு கலாசார கலையரங்குகள், கலைஞர்கள் தங்குவதற்கான விசேட அறைகள், பொது நூலக வசதிகள், யாழ் மற்றும் இந்திய கலாசார கலைகளை உள்ளடக்கிய சிற்ப ஓவிய கலைக்கூடங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2020ம் ஆண்டு நடுபகுதியளவில் இந்த மத்திய கலாசார மையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. அமைச்சர் றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். இந்திய உதவி தூதுவர் ஷங்கர் பாலச்சந்திரன், யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயன் உட்பட உயர் அதிகாரிகள் இதன்போது இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க