fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:52

இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ நிதி உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதற்கும் நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் துணை தலைவர் பெட்ரிகா மொக்கேரினி ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதனையடுத்து இலங்கைக்கு நிதியுதவி வழங்க தீர்மானித்ததாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் பணியை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதற்கு நிதியுதவி  வழங்குதல் உள்ளிட்ட மூன்று முக்கிய நோக்கங்களுக்காக 8.5 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க