fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 13:05

கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது

வரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹரா உத்தியோகபூர்வமாக நேற்று நிறைவடைந்தது. நேற்றிரவு இடம்பெற்ற இறுதி ரந்தோலி பெரஹரவை தொடர்ந்து இன்று அதிகாலை இடம்பெற்ற நீர் வெட்டுடன் பெரஹர நிறைவடைந்தது.

மியன்ராஜா, பர்மாராஜா ஆகிய கொம்மன் யானைகளுடன் கதிர்காம கந்தன் ஆலயத்தின் வாசனா யானைகளில் பேலைகள் வைக்கப்பட்டு இரவு 8.05 சுபவேளையில் பெரஹா ஆரம்பமாகியது. தலா வீதி, யட்டிநுவர வீதி, கந்தே வீதி ஊடாக பயணம் செய்த ஊர்வலம் இறுதியில் ரஜவீதி வழியாக உள்ளே பிரவேசித்தது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 2.12 மணி சுபவேளையில் விஷ்ணு, கண்ணகி மற்றும் கதிர்காம. நாத விகாரைகளின் பெரஹராக்களுடன் இவ்ஊர்வலம் இணைந்து கொண்டது. அதனை தொடர்ந்து அஸ்கிரிய கெடிகே மல்வ விகாரையை ஊர்வலம் வந்தடைந்தது, அங்கு புனித பேலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கெட்டம்பே ஆற்றில் நீர் வெட்டு இடம்பெற்றது.

இதயைடுத்து பெரஹர வெற்றிகரமாக முடிந்ததை அறிவிக்கும் ஆவணம் தியவடன நிலமே பிரதீப் திலங்க தேலவினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது, இப்பெரஹரா வெற்றிகரமாக முடிவதற்கு பங்களிப்பு வழங்கிய நடன, இசை கலைஞர்கள் மற்றும் யானைகளுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கப்பட்டன.

காலாசார முக்கியத்துவம் மிக்க எசல பெரஹர தொடர்பான தகவல்கள் தலதா மாளிகையிலிருந்து எமது ஊடக பணியின் பொறுப்பை அடிப்படையாக வைத்து, இலங்கை தொலைக்காட்சிகளின் தாயகமான ஐரிஎன் ஊடக வலையமைப்பினால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க