யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி புறக்கணிப்பில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:43

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி புறக்கணிப்பில்..

மாணவர்களின் நலன்சார்ந்த 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு கல்வியை நிறைவுசெய்த மாணவர்களுக்கு இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் மேற்கொள்ளப்படாமையே காரணமென கூறப்பட்டது.

இதனால் உடனடியாக வேந்தர் நியமனத்தை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி மாணவர்கள் கல்வி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:43

Default