fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:41

இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கம்பஹா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், தமது சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு, மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 ஆயிரத்து 858 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் 8 ஆயிரத்து 407 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க