மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று மக்களிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 09:46

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று மக்களிடம் கையளிப்பு

யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மயிலிட்டி வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பு திட்டம் மற்றும் திருநெல்வேளி விவசாய மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்படவுள்ளன. விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் பிரதமர் கலந்து கொள்வதுடன் கிழங்கு செய்கையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

குருநகர் மீன் பிடி துறைமுக வலை தயாரிப்பு மத்திய நிலையத்திற்கான அடிக்கல்லும் பிரதமரினால் நாட்டி வைக்கப்படவுள்ளது. இன்றைய தினம் சாவகச்சேரியிலுள்ள மனநல வைத்திய மத்திய நிலையமும் இன்று பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது,

நாளைய தினம் பிரதமர் யாழ் மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதுடன் கரவெட்டி வீடமைப்பு திட்டமும் பிரதமரால் நாளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 09:46

Default