நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Related Articles
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.