fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இறுதி ரந்தோலி பெரஹர இன்று இரவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2019 13:04

இறுதி ரந்தோலி பெரஹர இன்று இரவு

வரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹர உற்சவத்தின் இறுதி ரந்தோலி பெரஹர இன்று இடம்பெறவுள்ளது. ஐரீஎன் ஊடாக இதனை நேரடியாக ஒளிரப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் வருடந்தோறும் இடம்பெற்று வருகின்ற கண்டி எசல பெரஹரா உற்சவம் தற்போது மிகவும் கோலாகலமாக கண்டியில் நடைபெற்று வருகின்றது.பௌத்த சமயத்தவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற மதத் தளமான ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த சிறப்பு மிக்க விழா எசல பெரஹரா ஆகும்.

பௌத்த சமய மக்களால் புனிதமாகவும் உயர்வாகவும் மதிக்கப்படுகின்ற புத்தர் பெருமானின் புனித தந்தம் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வருடத்திற்கான எசல பெரஹெராவை கண்டியின் நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து வழமை போல நடத்துகின்றன.சிவன் கோவிலில் காப்புக்கட்டுதலுடன் சமய சம்பிரதாய நிகழ்வுடன் பெரஹரா ஆரம்பமாகியது.முதலாவதாக கும்பல் பெரஹரா என்ற பெயரிலான ஊர்வலம் இடம்பெற்றதுடன் ரந்தோலி ஊர்வலம் ஆரம்பமாகியது. கண்டி எசல பெரஹர உற்சவம் சிறந்த முறையில் நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். பக்தர்களுக்காக உச்சக்கட்ட பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஊர்வலத்தின் போது கண்கவரும் ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள் வலம் வருவதுடன் தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு பாரம்பரியக் கலைகளை காண முடியும். இந்த ஊர்வலத்தின் போது புனித சின்னங்கள் அடங்கிய பேழை, தேவலாயங்களின் திருஆபரணங்கள் நகர் வீதியாக எடுத்துச் செல்லப்படும். தவில், நாதசுரம், கரகம், காவடி, முதலான தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும் அங்கே காண முடியும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2019 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க