fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 18:14

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்த வாய்ப்பு காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஜனாதிபதி வியாக்கியானம் கோரியுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்கள் காணப்படுமாயின் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலங்கை சட்டதரணிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவற்கு காணப்படும் சட்டரீதியான வாய்ப்பு குறித்து அரசியல் அமைப்பின் 129 இன் முதலாம் பிரிவின் கீழ் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரியுள்ளார். அதற்கு அமைய இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை கையளிக்க முடியுமென உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோரியுள்ள வியாக்கியானம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 23ம் திகதி உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பிலான இறுதி முடிவு இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் ஜனாபதிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் உயர் நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 18:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க