2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிக்கு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 16:03

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிக்கு..

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. சகல கிராம சேவகர் அலுவலகங்களிலும், பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தமது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் குறிப்பிடப்படாவிட்டால் அறிவிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே தேர்தலில் வாக்களிக்க முடியும். இதனால் சகலரும் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதி செய்வது அவசியமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 16:03

Default