fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 16:09

ஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர்

அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் யுத்தப்பயிற்சி இடம்பெற்று வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மூன்று பக்கங்களை கொண்ட கடிதம் மூலம் இதுதொடர்பில் மனிப்பு கோரியதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிக செலவு மிக்கதும், அபத்தமானதுமான குறித்த யுத்த பயிற்சி தொடர்பில் தான் புகாரளிப்பதாகவும் அதை எச்சரிக்கும் வகையிலேயே ஏவுகணை சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் வடகொரிய தலைவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தப்பயிற்சி நிறைவடையும் வரை ஏவுகணை சோதனைகள் முன்னெடுக்கப்படுமென வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 16:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க