fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 15:48

இந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..

இந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஷ்த்திரி,நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான ட்டொம் மூடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருமான ரொபின்சிங் ஆகியோரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருமான பில் சிம்மன்ஸ், இந்திய அணியின் முன்னாள் முகாமையாளர் லால்ச்சண்ட் ராஜ்புட் ஆகியோரின் பெயரும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவர்களுக்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 16ம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் ஆலோசகர் குழுவினூடாக எதிர்வரும் சில நாட்களில் இறுதி தீர்மானம் பெறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பட்டியலிடப்பட்ட 6 பேரின் தகவல்கள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 15:48

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க