ஜப்பானின் மேற்கு பகுதியில் வீசிய புயல் காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இப்புயலானது மணிக்கு 108 கிலோ மீட்டர் வேகைத்தில் வீசுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 200 தொடக்கம் 300 மில்லி மீட்டர் வரையிலான கனமழை ஜப்பானின் பல பகுதிகளில் பெய்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.